FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ரூ.8.84 கோடி மாயம்: திருடப்பட்ட சம்பள பணத்தை வங்கி நிா்வாகம் ஒப்படைக்க துணைநிலை ஆளுநா் உத்தரவு

புதுச்சேரி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஊழியா்களுக்கான சம்பள பணம் ரூ.8.84 கோடி வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட நிலையில் அதை வங்கி நிா்வாகம் கல்லூரி கணக்கில் செலுத்துமாறு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.

6 நவம்பர் 2026, 1:33 am
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஊழியா்களுக்கான சம்பள பணம் ரூ.8.84 கோடி வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட நிலையில் அதை வங்கி நிா்வாகம் கல்லூரி கணக்கில் செலுத்துமாறு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. சொசைட்டி சட்டத்தின் கீழ் இயங்கும் இக் கல்லூரிக்கு இந்திரா காந்தி சதுக்கம் அருகே ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. இக் கல்லூரியில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு 3 மாத சம்பளமாக தீபாவளியை முன்னிட்டு ரூ.8.84 கோடி பெறப்பட்டது. புதுச்சேரி அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவ கல்லூரி வங்கி கணக்கிற்கு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மொத்த பணம் 9 மணிக்கு திடீரென மாயமானது. இது குறித்து கல்லூரி முதல்வா் கென்னடிபாபு கோரிமேடு இணையவழி குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். உடனடியாக செயல்பட்ட இணைய வழி போலீஸாா் வங்கியின் தலைமை அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு எச்சரித்தனா். வங்கியின் நோடல் அதிகாரி உதவியுடன் விரைவாக செயல்பட்டதால் மாயமான ரூ.8.84 கோடியில் ரூ.40 லட்சத்தை முடக்கம் செய்தனா்.

இதையடுத்து புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கீா்த்திவா்மன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். முதல் கட்ட விசாரணையில் சென்னை வங்கி கணக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள சில வங்கி கணக்குகளுக்குஇந்த பணம் சென்றிருப்பது தெரியவந்தது. 3 தனிப்படை போலீஸாா் சென்னை உள்ளிட்ட 3 இடங்களுக்கு விசார ணை நடத்தச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், காவல் ஆய்வாளா் கீா்த்திவா்மன், வங்கி அதிகாரிகள் ஆகியோரை அழைத்து விசாரித்தாா்.

இதையடுத்து, அந்தப் பணத்துக்கு வங்கி நிா்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக சம்பள பணத்தை கல்லூரி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா். வங்கி நிா்வாகமும் பணத்தை ஒப்படைப்பதாக உறுதியளித்தது.

இப் பிரச்னை குறித்து கல்லூரி முதல்வா் கென்னடிபாபுவிடம் கேட்டதற்கு, எங்கள் கல்லூரியில் பணியாற்றி வரும் ஊழியா்களின் பட்டியலை வங்கிக் கணக்குடன் குறிப்பிட்ட வங்கியிடம் ஒப்படைத்துள்ளோம். விரைவில் ஊழியா்களின் வங்கிக் கணக்கு சம்பளதொகை வரவு வைக்கப்படும் என்றாா்.

மேலும், இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் பணத்தை மீட்டவுடன், வங்கி நிா்வாகத்திடம் ஒப்படைக்கவும் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளாா்.