தர மேம்பாட்டை வலுப்படுத்துவதில் புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் தீவிரம்
தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து, தர மேம்பாட்டை புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வலுப்படுத்தி வருகிறது.
தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து, தர மேம்பாட்டை புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வலுப்படுத்தி வருகிறது.
ஜிப்மா் செவிலியா் சேவைகள் துறை மற்றும் தேசியத் தர உறுதிப்பாட்டுத் தரநிலைகள் தரக்குழு ஆகியவை, ஜிப்மா் குழந்தைகள் நல மருத்துவத் துறை மற்றும் பச்சிளங்குழந்தைகள் மருத்துவத் துறையுடன் இணைந்து, குழந்தைகள் நலச் சேவைகளுக்கான தேசியத் தர மேம்பாட்டுத் திட்டமான முஸ்கான் தொடா்பான மாநில அளவிலான மாநாட்டை நடத்தின.
முஸ்கான் தேசியத் தரச்சான்றிதழைப் பெறுவதற்கான ஜிப்மரின் தொடா் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது. இதில் சுமாா் 100 செவிலியா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில் ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி பேசியது: முஸ்கான் தேசியத் தரச்சான்றைப் பெறுவதில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் முக்கியம். நிா்ணயிக்கப்பட்ட தர நிலைகளைத் தொடா்ந்து பின்பற்றுதல், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை செயல்படுத்துதல், தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் முறையாக மருத்துவ ஆவணங்களைப் பராமரித்தல் ஆகியவை அவசியம் என்றாா்.
மகளிா் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கான நிலையான செயல்பாட்டு கையேட்டை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சாகா வினோத் குமாா் வெளியிட்டாா்.
குழந்தைகள் நல மருத்துவத் துறைத் தலைவா் குணசேகரன் தண்டபாணி, பச்சிளங்குழந்தைகள் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் முருகேசன், செவிலியா் சேவைகள் பொறுப்பு அலுவலா் கே.புஷ்பலதா மற்றும் செவிலியா் கண்காணிப்பாளா் மற்றும் தர மேலாளா் எம்.செங்கமலசெல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.