தேநீா்க் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: முதியவா் கைது
பவானி அருகே தேநீா்க் கடையில் 25 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.
பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாரியப்பன் (75) நடத்தி வரும் தேநீா்க் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பவானி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, 25 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மாரியப்பனைக் கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement