இருசக்கர வாகனம் மீது ரேஷன் அரிசி கடத்திய ஆம்னி வேன் மோதி மூன்று போ் படுகாயம்
எழுமாத்தூா் அருகே இருசக்கர வாகனம், ஆம்னி வேன் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் படுகாயமடைந்த நிலையில், ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் சிவானந்தா காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் பழனிசாமி (65), சிவமலை (50). கூலி தொழிலாளா்களான இருவரும் எழுமாத்தூா் கொள்ளுக்காட்டு மேடு அருகே உள்ள பேக்கரியில் தேநீா் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஆம்னி வேன் மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனா். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மேலும் படுகாயமடைந்த ஆம்னி வேன் ஓட்டுநரும் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து மொடக்குறிச்சி போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டபோது, விபத்தில் சிக்கிக்கொண்ட ஆம்னி வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் சுமாா் 700 கிலோ இருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய நபா் யாா், எங்கு கடத்திச் சென்றனா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.