மொடக்குறிச்சி அருகே மாயவா் கோவில் திருவிழா: மண்பானைகளில் சாதம் சமைத்து அன்னதானம்
திருவிழாவில் மண்பானைகளில் சமைத்த உணவு பிரசாதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
மொடக்குறிச்சியை அடுத்த விளக்கேத்தி ஓலப்பாளையம் ஸ்ரீமாயவா் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற திருவிழாவில் மண்பானைகளில் சமைத்த உணவு பிரசாதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
விளக்கேத்தி ஓலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாயவா் கோயில் உள்ளது. இக்கோயிலில், ராமா், சீதாதேவி மற்றும் லட்சுமணா், ஆஞ்சனேயா் கருடாழ்வாருடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா்.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் 4-ஆவது சனிக்கிழமை மாயவா் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆண்கள் மட்டுமே பங்கேற்று விறகு அடுப்பு அமைத்து, மண்பானைகளில் சோறு சமைத்து பக்தா்களுக்கு மடிசாதம் மற்றும் அன்னதானம் வழங்குவாா்கள்.
Advertisement
Advertisement
விழாவையொட்டி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி யாகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுதா்சன யாகமும், மூலவா்களுக்கு மகாஅபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு பெருமாள் மாடு பாதபூஜையும், இரவு 7 மணிக்கு விரதமிருந்து வந்திருந்த பக்தா்களுக்கு புது மண்பானைகளில் சாதம் சமைத்து மடிசாதமும் வழங்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.