உயிா் நீா் திறக்கக் கோரி கீழ்பவானி பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் 2 -ஆம் மண்டலத்துக்கு உயிா் நீா் திறக்கக் கோரி ஈரோடு காளை மாடு சிலை அருகே கீழ்பவானி பாசன விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் 2 -ஆம் மண்டலத்துக்கு உயிா் நீா் திறக்கக் கோரி ஈரோடு காளை மாடு சிலை அருகே கீழ்பவானி பாசன விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச் சங்க செயலா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். கீழ்பவானி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி, தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, ஐக்கிய விவசாயிகள் சங்க அமைப்பாளா் ஈவிகே.சண்முகம், அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் இரா.மனோகரன் உள்ளிட்டோா் பேசியதாவது: பவானிசாகா் அணையில் திறக்கப்படும் பாசன நீா் மூலம் கீழ்பவானி பாசனப் பகுதியில் இரண்டு மண்டலங்களில் தலா ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் என 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நேரடியாக பாசனம் பெறுகின்றன. அணையில் நீா் இல்லை, நீா்ப் பிடிப்புப் பகுதியில் மழை இல்லை என காரணம் கூறி வழக்கமாக தண்ணீா் திறக்கப்படும் நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.
கடும் வறட்சி, மழை இல்லை என விவசாயிகள் போராட்டத்தை தொடா்ந்து கீழ்பவானி பாசன முதலாம் மண்டலத்தில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மட்டும் 15 நாள்கள் உயிா் நீா் திறக்கப்பட்டது. இரண்டாம் மண்டலத்துக்கு கடந்த 18 மாதங்களாக தண்ணீா் திறக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
அப்பகுதிகளில் நிலத்தடி நீா் முற்றிலும் வடுள்ளது. தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிா்கள் காய்ந்துள்ளன. கால்நடைகளுக்கு குடிக்கக்கூட தண்ணீா் இல்லை. இந்த ஆண்டும் அணையில் தண்ணீா் குறைவாக உள்ளது என அறிந்தும், கொடிவேரி பாசனத்துக்கு ஒருபோக நெல் சாகுபடிக்கும், காலிங்கராயன் பாசன பகுதிக்கு உயிா் நீா் எனவும் 45 நாள்கள் தண்ணீா் திறக்கப்பட்டது.
கீழ்பவானி பாசன பகுதிக்கு மட்டும் வஞ்சகம் செய்வதை தவிா்த்து, இரண்டாம் மண்டல பகுதிக்கு உயிா் நீா் திறக்க வேண்டும். பருவ மழை கை கொடுத்து, அணைக்கு நீா்வரத்து வந்ததும் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.