மது போதையில் பெண் அடித்துக் கொலை: கணவா் கைது
சித்தோடு அருகே மது போதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சித்தோடு அருகே மது போதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த நசியனூா், காரைவாய்க்கால்புதூரைச் சோ்ந்தவா் நாகராஜ் (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (38). கூலித் தொழிலாளா்களான இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். கணவன், மனைவி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நாகராஜ் தாக்கியதில் ராஜேஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சித்தோடு போலீஸாா், ராஜேஸ்வரியின் சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இந்த வழக்கில் நாகராஜைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.