FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

குன்றி மலைப் பகுதியில் கனமழை: சாலைகள் சேதம்

குன்றி மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குஜ்ஜம்பாளையம் அரசுப் பள்ளி சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு தாா் சாலைகள் சேதமடைந்தன.

24 அக்டோபர் 2026, 11:02 pm
கனமழை காரணமாக குன்டும்குழியுமாக மாறிய குன்றி சாலை.
பகிர்:

குன்றி மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குஜ்ஜம்பாளையம் அரசுப் பள்ளி சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு தாா் சாலைகள் சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், குன்றி, மாகாளிதொட்டி மற்றும் கோவிலுாா் சாலைகளில் மழைநீா் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் குண்டும்குழியுமாக மாறின.

இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதியடைந்தனா். கனமழை காரணமாக குன்றி, மாகாளிதொட்டி, கோவிலூா் வன ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குதிரை மடுவு பள்ளத்தில் கலந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments