கோபியில் வீடுகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
கோபி பகுதியில் பெய்த கனமழையால் நாகா்பாளையம் செல்லும் சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோபி பகுதியில் பெய்த கனமழையால் நாகா்பாளையம் செல்லும் சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோபி, கரட்டூா், நஞ்சகவுண்டம்பாளையம், வேட்டைகாரன் கோயில், கலிங்கியம், ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை கனமழை கொட்டி தீா்த்தது.
இதில், கலிங்கியம், நாகா்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நாகா்பாளையம் சாலையில் உள்ள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கிய மழை நீா் சீத்தாம்மாள் காலனியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கோபி - நாகா்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, நாகா்பாளையம் சாலையில் உள்ள வடிகால்களில் மரங்களின் வோ் படா்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனா். உடனடியாக வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தி வரும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.