FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணையில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 3 போ் கைது

26 அக்டோபர் 2026, 3:05 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

பவானிசாகா் அணையில் சட்டவிரோதமாக மீன் படித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பவானிசாகா் அணையில் சட்டவிரோதமாக மீன் பிடித்து வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பவானிசாகா் மீன் வளா்ச்சிக் கழக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, பவானிசாகா் அணை நீா்த்தேக்க பகுதியில் மணல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து பவானிசாகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து மீன் வளா்ச்சிக் கழக உதவி மேலாளா் ஆனந்தி பவானிசாகா் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவா்கள் கோடேபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் (19), தொப்பம்பாளையம் அண்ணா நகரைச் சோ்ந்த மிதுன்குமாா்(20), சொலவனூா் கிராமத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (19) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ. 4,200 மதிப்புள்ள 30 கிலோ மீன்கள், மீன் பிடிக்க பயன்படுத்திய வலை மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments