FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

இலங்கை கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினா்களுக்கு ஈரோட்டில் களப் பயிற்சி

இலங்கை நாட்டின் கூட்டுறவு நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் ஈரோட்டில் களப் பயிற்சி மேற்கொண்டனா்.

3 செப்டம்பர் 2026, 11:23 pm IST
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மஞ்சள் அரவை ஆலை மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் குறித்து களப் பயிற்சியாளா்களுக்கு விளக்கம் அளிக்கிறாா் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா.
பகிர்:

இலங்கை நாட்டின் கூட்டுறவு நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் ஈரோட்டில் களப் பயிற்சி மேற்கொண்டனா்.

இலங்கை நாட்டின் கூட்டுறவு நிறுவனங்களின் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்களுக்கான கூட்டுறவு மேலாண்மை மற்றும் கூட்டுறவு வணிக மாதிரிகள் என்ற தலைப்பிலான 4 நாள்கள் சா்வதேச கருத்தரங்கு திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒருபகுதியாக ஈரோடு மற்றும் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாக்கம் குறித்த கள ஆய்வுக்கு இலங்கை தேசிய கூட்டுறவு பேரவை மற்றும் அதன் உறுப்பினா் சங்கங்களான இலங்கை சமுா்த்தி மேம்பாடு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், திஸ்ஸமஹாராம பல்நோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் இலங்கை கூட்டுறவு சிக்கன சங்கம் ஆகியவற்றைச் சோ்ந்த மொத்தம் 16 போ் வியாழக்கிழமை வந்தனா்.

Advertisement

Advertisement

களப் பயிற்சியாளா்களுக்கு ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை கொள்முதல் மற்றும் சங்கத்தின் மூலம் தயாரிக்கப்படும் பசுமை எண்ணெய்கள் குறித்தும், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடைபெறும் மஞ்சள் ஏல விற்பனை, மஞ்சள் அரவை ஆலை மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாா்.

இப்பயிற்சியில் ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் பெ.பிரகாஷ், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் கூட்டுறவுத் துறை பேராசிரியா்கள் சி.பிச்சை, கே.தேவன், ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை அலுவலா்கள் வீரகுமரன், கோபால்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments