FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

24 செப்டம்பர் 2026, 1:03 am IST
தேரோட்டத்தில்  பங்கேற்ற  பக்தா்கள்.
பகிர்:

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ தோ்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ஆம் தேதி கிராமசாந்தி, 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் கஸ்தூரி அரங்கநாதா் எழுந்தருள தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆனந்தமோகன், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், செயல் அலுவலா் சுரேந்தா் உள்ளிட்டோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரோட்டம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

Advertisement

Advertisement

விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. வியாழக்கிழமை பரிவேட்டை, வெள்ளிக்கிழமை தெப்ப உற்சவம், சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments