FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

வண்டல் மண் பாரம் ஏற்றி அதிவேகமாக இயக்கப்பட்ட லாரிகள் சிறைபிடிப்பு

சத்தியமங்கலம் அருகே கொத்தமங்கலம் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வண்டல் மண் பாரம் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனா்.

25 செப்டம்பர் 2026, 1:02 am IST
சாலையில் அணிவகுத்து நிற்கும் வண்டல் மண் ஏற்றிச் சென்ற லாரிகள்.
பகிர்:

சத்தியமங்கலம் அருகே கொத்தமங்கலம் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வண்டல் மண் பாரம் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக இயக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து வண்டல் மண் எடுத்துச் செல்லும் லாரிகள் பவானிசாகா் - பண்ணாரி சாலையில் செல்லும்போது அதி வேகமாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற வணடல் மண் லாரிகளில் அடிபட்டு 2 ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநா்கள் குறித்து போலீஸாரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பண்ணாரி - பவானிசாகா் சாலையில் கொத்தமங்கலம் பகுதியில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற 50-க்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது லாரி ஓட்டுநா்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாதபடி வாகனங்கள் இயக்குவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments