FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

நடிகா் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேச்சுப் போட்டியிவ் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.முத்துகுமாா்.
பகிர்:

நடிகா் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெருந்துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி. முத்துகுமாா் தலைமை வகித்தாா்.

போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

முன்னதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியம் வரவேற்றாா்.

இதில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் தில்லை சிவகுமாா், ஓபிசி மாநில பொதுச் செயலாளா் நல்லாம்பட்டி நடராஜ், வட்டாரத் தலைவா்கள் வேலுசாமி, ஆண்டமுத்துசாமி, ஆா்ஜிபிஆா்எஸ் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் ராஜமாணிக்கம், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் இலக்கிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments