நீலகிரியில் இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இம்முகாம் உதகை வட்டத்தில் நடுவட்டம் சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் உலிக்கல் திருவள்ளுவர் நகர் சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் ஜெகதளாவில் உள்ள ஒசஹட்டி சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் பாலகொலாவில் உள்ள கன்னேரிமந்தனை சமுதாயக் கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், பந்தலூர் வட்டத்தில் சேரங்கோடு சமுதாயக் கூடத்திலும் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.