FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

பசுந்தேயிலை விலை கிலோ ரூ. 12.60 ஆக நிர்ணயம்

பசுந்தேயிலைக்கு இம்மாத விலையாக கிலோவுக்கு ரூ. 12.60 நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Updated On : 8 ஜூன் 2018, 2:07 am IST
பகிர்:

பசுந்தேயிலைக்கு இம்மாத விலையாக கிலோவுக்கு ரூ. 12.60 நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
இதுகுறித்து, தென்னிந்திய தேயிலை வாரிய குந்தா இணை இயக்குநர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு ஜூன் மாதத்துக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.12.60 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை அனைத்துத் தொழிற்சாலை நிர்வாகங்களும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 
மேற்படி விலை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம். இதுகுறித்து, தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்குவதை உறுதி செய்யவேண்டும். இதை வழங்காத தேயிலை நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments