FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் பரவலாக மழை

உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மீண்டும் பரவலாக மழை பெய்தது.

Updated On : 25 மே 2018, 12:47 am IST
பகிர்:

உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மீண்டும் பரவலாக மழை பெய்தது.
உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையிலிருந்தே மேக மூட்டமாக இருந்தது. இரவில் திடீரென பரவலாக நல்ல மழை பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில், புதன்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு உள்ளிருந்த பெரிய மரம் ராஜ்பவன் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் விழுந்ததால் வியாழக்கிழமை இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் பூங்காவின் சுற்றுச்சுவரும் உடைந்து விழுந்தது.
அதேபோல, ஹில்பங்க் சாலை பகுதியிலும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் இச்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரமும் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடநாட்டில் 51 மி.மீ., உதகையில் 40 மி.மீ., கேத்தியில் 34 மி.மீ., கோத்தகிரியில் 10 மி.மீ., குந்தாவில் 9 மி.மீ., கூடலூரில் 8 மி.மீ., தேவாலாவில் 5 மி.மீ., கிளன்மார்கனில் 3 மி.மீ., அப்பர்பவானி மற்றும் எமரால்டில் தலா 2 மி.மீ., குன்னூர் மற்றும் அவலாஞ்சியில் தலா 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments