ஆசியா-பசிபிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகள்: கூடைப்பந்து அணிக்கு உதகையைச் சேர்ந்த நால்வர் தேர்வு
மலேசியாவில் பினாங்கு நகரில் நடைபெறவுள்ள ஆசியா-பசிபிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கூடைப்பந்து அணியில் உதகையைச் சேர்ந்த 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மலேசியாவில் பினாங்கு நகரில் நடைபெறவுள்ள ஆசியா-பசிபிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கூடைப்பந்து அணியில் உதகையைச் சேர்ந்த 4 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மலேசியாவில் பினாங்கு நகரில் செப்டம்பர் 8 ஆம்தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஆசியா-பசிபிக் மாஸ்டர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகளில் இந்திய அணியும் பங்கேற்கிறது. இவற்றில் மொத்தம் 248 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தேசிய கூடைப்பந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 13 வீரர்களில் உதகையைச் சேர்ந்த நால்வர் இடம் பெற்றுள்ளனர்.
நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்க துணைத் தலைவர் ஜே.ரவிக்குமார், மாநில துணைத் தலைவர் மோகன்குமார், சங்கத்தின் செயலர் விஸ்வநாதன் ஆகியோருடன் உதகை லாரன்ஸ் பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் குல்தீப் சிங்கும் இடம்பெற்றுள்ளார்.
இவர்களோடு கோவையிலிருந்து இருவரும், மதுரையிலிருந்து ஒருவரும், கேரளத்திலிருந்து இருவரும், தில்லியிலிருந்து மூவரும், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒருவரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணிக்காக தேர்வு பெற்று மலேசியா செல்லும் நால்வரையும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கத்தினர் உதகையிலிருந்து வியாழக்கிழமை வழியனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.