FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

நீலகிரியில் கனமழை:  போக்குவரத்து-மின் இணைப்பு  பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூலை 2022, 11:29 am IST
பகிர்:

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் உதகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்வதால் போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மற்றும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று பார்வையிடுகின்றனர். மாவட்டத்தில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக மேல் பவானி யில் 324 மிமீ. மழை பதிவாகியுள்ளது. 

அதேபோல அவலாஞ்சியில் 320 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. பிற பகுதிகளில் பதிவான மழை விபரம் வருமாறு அளவு மி. மீரில்: கூடலூர் 167, மேல் கூடலூர் 161, எமரால்டு 108, பந்தலூர் 103, கிளன்மார்கன் 100, தேவாலா 96, சேரம்பாடி92, நடுவட்டம் 89.6, குந்தா 79, உதகை 27.9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments