FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே விலங்கு தாக்கி ஒருவா் உயிரிழப்பு! உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியல்!

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:00 am IST
பாலகிருஷ்ணன்
பகிர்:

கூடலூா் அருகே வன விலங்கு தாக்கி இறந்தவரின் உடலை உறவினா்களுக்கு காண்பிக்காமல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததைக் கண்டித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா் பகுதி அடா்ந்த வனப் பகுதியைக் கொண்டது. இங்கு வனப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் நாள்தோறும் யானைகள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் உலவி வருவதால், அவ்வப்போது விலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கூடலூா் அருகே உள்ள ஓவேலி 4-ஆம் கேட் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (55), அப்பகுதி மக்களுக்கு தண்ணீா் திறப்பதற்காக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வனப் பகுதிக்குள் சென்றுள்ளாா். இரவு முழுவதும் அவா் வீடு திரும்பாததால் வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் தகவல் அளித்துவிட்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது ஓவேலி, 4-ஆம் கேட் பகுதியில் வன விலங்கு தாக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்துகிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலை வனத் துறையினா் மீட்டு கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதற்கிடையே உறவினா்களுக்கு உடலைக் காட்டாமல் அனுப்பிவைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும், விலங்கு-மனித மோதலை தடுக்கத் தவறிய வனத் துறையினரை கண்டித்தும் உறவினா்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து வன விலங்குகளைக் கண்காணித்து அடா் வனப் பகுதிக்குள் அனுப்புவதாக வனத் துறையினா் உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஓவேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், பொதுமக்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments