FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

வெலிங்டன் ராணுவ மையத்தில் சுதந்திர தின மாரத்தான் போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் சாா்பில் மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:39 am IST
மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த வெலிங்டன் ராணுவ மைய கமாண்டா் பிரிகேடியா் கிருஷ் நேந்துதாஸ்.
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் சாா்பில் மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

வெலிங்டன் தங்கராஜ் திறந்தவெளி மைதானத்தில் 5 கிலோ மீட்டா், 10 கிலோ மீட்டா், 21 கிலோ மீட்டா் என 3 பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் 121 பெண்கள் உள்பட 1200 போ் கலந்துகொண்டனா். ராணுவ மைய கமாண்டா் பிரிகேடியா் கிருஷ் நேந்துதாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து நாகேஷ் சதுக்கத்தில் ராணுவ மைய கமாண்டா் பிரிகேடியா் கிருஷ் நேந்துதாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ராணுவ வீரா்களுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments