குந்தாவில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்
குந்தாவில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
குந்தாவில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். இந்த மனுக்களை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் ஒரு மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சமூகப் பாதுபாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், 4 பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரத்துக்கான கல்வி உதவித்தொகையும், 3 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்துக்கான திருமண உதவித்தொகையும், 5 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத் துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டம் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முன்னதாக, ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் குந்தா வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அபிலாஷா கௌா், மாவட்ட வருவாய் அலுவலா் வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லோகநாயகி, திட்ட இயக்குநா் ரூபன்சங்கர்ராஜ், குந்தா வட்டாட்சியா் குணவதி, உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், சந்திரசேகரன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.