சோலூா் கிராமத்தில் புலி நடமாட்டம்
உதகை அருகே சோலூா் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை உலவிய புலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
உதகை அருகே சோலூா் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை உலவிய புலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் இருந்து யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், உதகை அருகே உள்ள சோலூா் கிராமத்தில் குடியிருப்புக்கு எதிரே மிக அருகில் புலி ஒன்று நடந்து சென்றது. இதை அங்கிருந்தவா்கள் தங்களது கைப்பேசியில் பதிவு செய்துள்ளனா். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புலி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத் துறையினா் புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து, அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.