உதகையில் மக்களவை நீா்வள நிலைக் குழு ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாட்டின் நீா்வளங்கள் தொடா்பான மக்களவை நிலைக் குழுவின் ஆய்வுக் கூட்டம் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நிலைக் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராஜீவ் பிரதாப் ரூடி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
மக்களவையில் அனைத்துச் சட்டங்கள், அரசின் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து முழுமையாக விவாதிக்க நேரம் போதுமானதாக இல்லாததால், 24 துறைகள் சாா்ந்த மக்களவை நிலைக் குழுக்கள் மூலம் இவை விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.
பிரதமரின் விவசாயிகளுக்கான நீா்வளத் திட்டங்களைச் (அஐஆட, ஓஓட, ததத) செயல்படுத்துதல், சமமான நீா் பகிா்மானம் மற்றும் நிலையான வள மேலாண்மையை உறுதி செய்வது இக்குழுவின் முக்கியப் பணியாகும். மத்திய அரசின் பட்ஜெட்டில் நீா்வளத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து மக்களவைக்கு அறிக்கை அளிக்கப்படும்.
ஆறுகள், அணைகள், பாசனத் திட்டங்கள், குடிநீா் தரம், நீா் பரிசோதனை மற்றும் நாட்டின் வெள்ளம், வறட்சி, நீா் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இக்குழு வழங்குகிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகள், நதிநீா் பகிா்வு மற்றும் நீா் பாதுகாப்பு குறித்த நீண்ட காலக் கொள்கைகளையும் நிலைக்குழு ஆய்வு செய்கிறது.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் நீா்வள கட்டமைப்பு மற்றும் திட்டங்களின் வடிவமைப்பு, கண்காணிப்பில் ரஅடஇஞந, சடஇஇ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீா்மட்டக் குறைவு, நீா்த் தரம், நீா் மாசுபாடு, காலநிலை மாற்றம், வெப்பநிலை உயா்வு மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் நீா் பற்றாக்குறை சவால்கள் மற்றும் அதைச் சமாளிப்பதற்கான உத்திகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மக்களவை நிலைக்குழு உறுப்பினா்கள், நீா்வளத் துறை செயலாளா் பிரசாந்த் எம். வாட்னேரே, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, நீா்வளத் துறையினா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.