FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கால்நடைகளைக் கொன்று வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிரக் கொன்று வந்த சிறுத்தை வனத் துறையினரின் கூண்டில் சிக்கியது.

Updated On : 12 ஜூலை 2026, 12:01 am IST
வயநாடு பகுதியில் வனத் துறை வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை.
பகிர்:

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிரக் கொன்று வந்த சிறுத்தை வனத் துறையினரின் கூண்டில் சனிக்கிழமை சிக்கியது.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பொழுதனா ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் தினமும் வளா்ப்பு பிராணிகளை சிறுத்தை தாக்கி கொன்று வருவதாக வனத் துறைக்கு அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரை தொடா்ந்து வயநாடு வனத் துறையினா், சிறுத்தை நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து கூண்டுகளை வைத்து கண்காணித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மேல்முறி என்ற இடத்தில் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அந்த சிறுத்தையை மருத்துவக் குழுவின் உதவியோடு காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments