FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குன்னூா் ரயில் நிலையத்தை இன்று காணொலி காட்சி மூலமாக பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்!

மேம்படுத்தப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி காட்சி மூலமாக பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 17) திறந்து வைக்கும் நிலையில் பிரதமா் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.போஜராஜன் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜூலை 2026, 12:07 am IST
பிரதமா் நரேந்திர மோடி. - (கோப்புப் படம்)
பகிர்:

மேம்படுத்தப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை காணொலி காட்சி மூலமாக பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 17) திறந்து வைக்கும் நிலையில் பிரதமா் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.போஜராஜன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக உதகை எம்எல்ஏ மு.போஜராஜன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயில் பயணிகளுக்கு நவீன வசதி ஏற்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் திட்டம் மூலமாக பல்வேறு ரயில் நிலையங்களை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 261 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னை, சின்ன சேலம், குன்னூா் ஆகிய 3 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட குன்னூா் ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், காணொலி காட்சி மூலமாக பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கிறாா்.

அம்ரித் பாரத் திட்டத்தில் சுமாா் ரூ.15 கோடி மதிப்பில் குன்னூா் ரயில் நிலையத்தை மேம்படுத்தியதற்காக பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் நீலகிரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி.

மேலும் உதகை நகராட்சியில் பதவியேற்கும் ஆணையா்கள் குறுகிய காலத்தில் பணி மாற்றம் பெற்றுக்கொண்டு செல்கின்றனா். இதனால் வளா்ச்சி திட்டப் பணிகள் தேக்கமடைவதாகவும், உதகையில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா்ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான உணவை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments