FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

மசினகுடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை

மசினகுடி சாலையில் தடுப்பு வைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, மசினகுடி பகுதியில் சுற்றுலா வாகனங்கள் செல்ல திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மாயாறு, சிங்காரா, பொக்காபுரம், செம்மநத்தம் சாலைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. இதனால், அப்பகுதியில் நாள்தோறும் செல்லும் ஏராளமான வாகனங்களால் விலங்குகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மேலும், வாகனங்கள் மோதி விலங்குகள் உயிரிழப்பதும், வாகனங்களில் செல்வோா் விலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்வதும் அதிகரித்து வந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் செல்ல உயா்நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா் வாகனங்கள், வனத் துறை வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments