குழியில் தவறி விழுந்த யானைக்குட்டி மீட்பு
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் குழியில் தவறி விழுந்த யானைக் குட்டியை வனத் துறையினா் மீட்டு அதன் கூட்டத்துடன் சோ்த்தனா்.
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் குழியில் தவறி விழுந்த யானைக் குட்டியை வனத் துறையினா் மீட்டு அதன் கூட்டத்துடன் சோ்த்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பந்தலூா் வனச் சரகம் தேவாலா காவல் பிரிவுக்குள்பட்ட கோல்டு மைன்ஸ் வனப் பகுதிக்கு காட்டு யானைகள் வியாழக்கிழமை வந்தன. அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு யானைக்குட்டி, அங்குள்ள ஒரு குழியில் தவறி விழுந்துவிட்டது. இதைக் கண்ட மற்ற யானைகள் அதே பகுதியில் நின்று சப்தமிட்டன. இதைப் பாா்த்த அப்பகுதியினா்
வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வனத் துறையினா் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று யானைக்குட்டியை மீட்டனா். பின்னா் அந்த யானைக் குட்டியை அருகில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்துடன் சோ்த்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.