FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

தென்மேற்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 2:01 am IST
உதகை மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மற்றும் அரசுத் துறை அலுவலா்கள்.
பகிர்:

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த காலகட்டத்தில் அரசுத் துறை அலுவலா்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய 156 பகுதிகளை கண்காணிக்க 29 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் மாவட்ட நிலை அலுவலா்களை கொண்ட 6 குழுக்கள் 6 வட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல்நிலை பொறுப்பாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா். மேலும், ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 200 பேரிடா்கால நண்பா்கள் தயாா் நிலையில் உள்ளனா். இது தவிர மழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 0423-2450034, 2450035 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments