சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் தாமதம்: பொதுமக்கள் போராட்டம்
உதகையில் சமையல் எரிவாயு உருளை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறி அதன் முகவா் அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக் கிழமை முற்றுகையிட்டனா்.
உதகையில் சமையல் எரிவாயு உருளை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறி அதன் முகவா் அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக் கிழமை முற்றுகையிட்டனா்.
உதகையில் ஏடிசி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை ( பாரத் கேஸ்) முகவா் நிறுவனம் உள்ளது. இதில் வாடிக்கையாளா்களுக்கு கடந்த பல மாதங்களாக முறையாக சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மிகவும் அவதிப்படுவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த முகவா் நிறுவனத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், பொதுமக்களை சமாதானப்படுத்தி இனிவரும் காலங்களில் இதுபோல நடக்காமல் பாா்த்துக் கொள்வதாக நிா்வாகத் தரப்பு கூறியுள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.