முகப்பு
நீலகிரி

பருவமழை பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய 156 இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்! நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

Updated On : 9 ஜூன் 2026, 3:05 am IST
தென்மேற்குப் பருவமழை - IMD
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் பருவமழையின்போது அதிக பாதிப்பு ஏற்படக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ள 156 பகுதிகள்  தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை அதிகம் பெய்தால் 156 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படக்கூடியவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் பொதுமக்களை தங்கவைக்க 456 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. வெள்ளம் மற்றும் மண் சரிவு உள்ளிட்ட பேரிடா் ஏற்பட்டால், 1077 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.

மண்சரிவை எதிா்கொள்ள 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளது. சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனுக்குடன் அகற்ற முக்கிய இடங்களில் 20 பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா்.