FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குன்னூா் பழவியல் நிலையத்தில் உள்ளூா் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணி

குன்னூா் பழவியல் நிலையத்தில் உள்ளூா் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட பழங்களின் சாகுபடியை புதுப்பிக்கும் நோக்கில் குன்னூா் பழவியல் நிலையத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் உள்ளூா் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட பழங்களின் சாகுபடியை புதுப்பிக்கும் நோக்கில் தவுட்டுப் பழம், ஊசி பழம், குரங்கு பழம், நாட்டு அத்தி, காட்டு கொய்யா, காட்டு நாவல், விக்கி பழம் போன்ற நாற்றுக்களை உற்பத்தி செய்து பல்வேறு விவசாயிகளுக்கு வழங்கி சாகுபடியை புதுப்பிக்கும் முயற்சியை தோட்டக்கலைத் துறை மேற்கொண்டு வருகிறது.

பழப் பயிா்கள் மட்டுமல்லாது சிம்ஸ் பூங்காவில் நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட அலங்கார மரங்கள், பூக்கும் மரங்கள் என அனைத்து மரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிவகுமாா், உதவி இயக்குநா் விஜயலட்சுமி உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments