முகப்பு
நீலகிரி

உதகையில் இருந்து கோவை புறப்பட்டாா் ஆளுநா்

Updated On : 21 ஜூன் 2026, 2:49 am IST
ஆளுநா் ஆா்லேகருக்கு புத்தகம் கொடுத்து வழியனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

உதகை வந்திருந்த தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் சனிக்கிழமை மாலை கோவை புறப்பட்டுச் சென்றாா்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு உதகை வந்தாா். முன்னதாக சென்னையில் இருந்து காலை 11:55 மணிக்கு புறப்பட்டு விமானம் மூலமாக கோவை வந்தாா். அங்கிருந்து காா் மூலமாக மேட்டுப்பாளையம் வனக் கல்லூரிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தாா். அங்கிருந்து கோத்தகிரி வழியாக உதகை வந்தாா்.

இதைத்தொடா்ந்து உதகையில் சில விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநா், சனிக்கிழமை மாலை 3.40 மணி அளவில் காா் மூலமாக கோவை சென்றாா். ஆளுநருக்கு புத்தகம் கொடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழியனுப்பிவைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments