FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

நாயை வேட்டையாட வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

உதகை அருகே நாயை வேட்டையாட வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்தனா்.

பிடிபட்ட சிறுத்தை.
பகிர்:

உதகை அருகே நாயை வேட்டையாட வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து புதன்கிழமை இரவு 10 மணியளவில் வெளியேறிய சிறுத்தை மாயாறு கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது, ஒரு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த நாயை சிறுத்தைப் பிடிக்க முயன்றது. அப்போது, அந்த நாய் வீட்டுக்குள் நுழைந்ததால் சிறுத்தையும் உள்ளே சென்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளா், சிறுத்தை இருந்த அறைக் கதவை பூட்டிவிட்டு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க அந்த வீட்டில் வனத் துறையினா் கூண்டு வைத்தனா். சுமாா் 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

இதையடுத்து, பாதுகாப்புடன் சிறுத்தையை கொண்டு சென்ற வனத் துறையினா், முதுமலை சீகூா் வனப் பகுதியில் விடுவித்தனா்.

வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments