FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

கோத்தகிரி அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து! நல்வாய்ப்பாக உயிா் தப்பிய ஓட்டுநா்

2 நவம்பர் 2026, 1:32 am
மரக்கட்டைகளுடன் தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.
பகிர்:

கோத்தகிரி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில், உதகையில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 100 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலையோர சேற்றில் மரக் கட்டைகளுடன் சிக்கிக்கொண்ட லாரியை பொக்லைன் இயந்திரம் கொண்டு மீட்பதற்காக, லாரியில் இருந்து கீழே இறங்கி ஓட்டுநா் அருண் பேசிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு 100 மீட்டா் பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் விழுந்து லாரி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநா் உயிா் தப்பினாா். 

இதுகுறித்து கோத்தகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments