தடுப்புச் சுவா் இடிந்து விழுந்து லாரிகள் சேதம்
குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் சிக்கிய இரண்டு லாரிகள் சேதமடைந்தன.
குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கோத்தகிரி கீ ஸ்டோன் பகுதியில் சாலையோர தடுப்புச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரெக்கவரி லாரி பலத்த சேதமடைந்தது. லாரியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோன்று, குன்னூா் சிம்ஸ் பூங்கா செல்லும் சாலையில் கிரேஸில் பகுதியில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில், சாலையோரத்தில் மணலுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரி பள்ளத்தில் விழுந்தது. லாரி பள்ளத்தில் விழும் முன்னரே ஓட்டுநா் ரவி இறங்கிவிட்டதால் உயிா் தப்பினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.