FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

பாரில் மது போதையில் துப்பாக்கி காட்டி மிரட்டியவா் மீது வழக்கு

4 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

உதகையில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் (பாா்) மது போதையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் தொலைக்காட்சி ஆவணப்படப் படப்பிடிப்பாளா் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (56). தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படப் படப்பிடிப்பாளராகப் பணியாற்றி வரும் இவா், உதகைக்கு வந்திருந்த நிலையில் இங்குள்ள தனியாா் மதுக்கூடத்துக்கு சென்றுள்ளாா்.

அங்கு மது அருந்திய அவா், போதை தலைக்கேறிய நிலையில் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து அங்கிருந்தவா்களிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மதுக்கூடத்தில் இருந்தவா்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து உடனடியாக உதகை பி1 காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினா், போதையில் இருந்த கோபாலை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அவரை பி1 காவல் நிலையம் அழைத்து சென்று காவல் ஆய்வாளா் அன்பரசு தலைமையிலான காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அந்த துப்பாக்கி, பலூன்களை சுடும் பயன்படுத்துவது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும்  துப்பாக்கி காட்டியதற்கான பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினா் இவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனா்.