சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு
கூடலூா் அருகே சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

கூடலூா் அருகே சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை, தானிமட்டம் பகுதிக்குள் நுழைந்தது. அங்கு விஸ்வரம் என்பவரது வீட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த 3 ஆடுகளைத் தாக்கிக் கொன்றது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கிருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தனா். அப்போது, அது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இது தொடா்பாக வனத் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement