குன்னூா்-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூா் -கோத்தகிரி சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் - கோத்தகிரி சாலையில் வட்டப்பாறை பகுதியில் திங்கள்கிழமை இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், குன்னூா் -கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலை அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
Advertisement
Advertisement