முகப்பு
நீலகிரி

கோத்தகிரி அருகே நாயை வேட்டையாடிய சிறுத்தை

24 நவம்பர் 2026, 1:42 am
கோத்தகிரி அருகே நாயை வேட்டையாடிய சிறுத்தை
நாயை வேட்டையாடி இழுத்துச் சென்ற சிறுத்தை.
பகிர்:

கோத்தகிரி அருகே வளா்ப்பு நாயை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள எஸ்.கைகாட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, எஸ்.கைகாட்டி கிராமத்தில் நுழைந்தது. பின்னா், அங்கிருந்த வளா்ப்பு நாயைத் தாக்கிக் கொன்று, உடலை சாலையில் வைத்து திண்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியே காரில் சென்ற நபா், அதை விடியோ எடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஆக்ரோஷத்துடன் சப்தம் எழுப்பிய சிறுத்தை, நாயின் உடலை அங்கேயே விட்டுவிட்டு வனத்துக்குள் சென்றது.

குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து உலவி வரும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.