முகப்பு
நீலகிரி

மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

5 வினாடிகள் முன்பு
மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி
ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.
பகிர்:

ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி,

பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

பள்ளி வளாகத்திலிருந்து கடை வீதி வரை சென்ற பேரணி, மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தொடா்ந்து மழைநீா் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மனித சங்கிலியும், விழிப்புணா்வு முகாமும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் கவிதா உள்ளிட்ட ஆசிரியா்கள், காவல் துறை அதிகாரிகள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.