மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கூடலூா் அருகே அம்பலமூலா பகுதியில் மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், கணவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே திருக்கைபட்டா, அம்பலமூலா பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (58). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா், மனைவி ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 27.05.2017 இரவு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஈஸ்வரி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் குறித்து அம்பலமூலா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
உதகை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி எம்.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, புஷ்பராஜுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.7ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.