கிராமப் புறங்களில் சட்ட உதவி மையங்களை நடத்த வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும்! - நீதிபதி ராஜேஷ் விவேகானந்தன்

கிராமப் புறங்களில் சட்ட உதவி மையங்களை நடத்த வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் விவேகானந்தன் தெரிவித்தாா்.
அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கம், நீலகிரி மாவட்ட அகில பாரதிய வழக்குரைஞா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் அரசமைப்பு தின விழா உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: கிராமங்கள்தோறும் சட்ட உதவி மையங்கள், சட்ட விழிப்புணா்வு முகாம்களை நடத்த வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும்.
Advertisement
Advertisement
அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எதிா்கால தலைமுறையினருக்கு எடுத்துரைப்பது அனைவரின் கடமையாகும். மேலும் குழந்தைப் பருவத்தில் இருந்தே நல்ல பண்புகள், ஒழுக்கம் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இதன் மூலம் ஆரோக்கியமான குடும்ப உறவுகளையும், நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும். குடும்ப நீதிமன்றங்கள் சமூகத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குடும்பப் பிரச்னைகளுக்கு சமூக நலன் சாா்ந்த தீா்வுகளைக் காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், பல்வேறு மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பது அவசியமாகும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் சுதீப்குமாா், மாநில துணைத் தலைவா் சங்கமித்ரா, நீலகிரி மாவட்ட நிா்வாகி பி.குமரன் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் மு. போஜராஜன், மூத்த வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, சந்திர மோகன், விஸ்வநாத், பாஸ்கரன், பாஜக மாவட்ட தலைவா் தருமன் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.