குன்னூரில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் சரக்கு வாகனம் சேதம்

குன்னூா் அருகே சாலையோர தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் சரக்கு வாகனம் சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மூடுபனியுடன் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமையும் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில், உதகை-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே இருந்த தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் சேதமடைந்தது. வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.