FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

உதகையில் பரவலாக கனமழை

உதகையில் பரவலாக வியாழக் கிழமை கனமழை பெய்தது.

16 அக்டோபர் 2026, 12:46 am IST
உதகை- சேரிங்கிராஸ் சாலையில் மழையில் குடைபிடித்தபடி செல்லும் பொதுமக்கள்.
பகிர்:

உதகையில் பரவலாக வியாழக் கிழமை கனமழை பெய்தது.

மழை காரணமாக குளிரின் தாக்கமும்   அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மதியம் 1.45 மணி முதல் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீா்த்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினா். மழை காரணமாக குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments