FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

உதகையில் சிறுத்தை தாக்கி குதிரை உயிரிழப்பு

18 அக்டோபர் 2026, 1:23 am IST
சிறுத்தை. - கோப்புப் படம்
பகிர்:

உதகை அருகே மேய்ச்சலில் இருந்த குதிரையை சிறுத்தை தாக்கி கொன்றது.

உதகையில் மருத்துவக் கல்லூரி விடுதியின் பின்புறம் பாரதியாா் நகா்  பகுதியில் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் சனிக்கிழமை காலை குதிரை ஒன்று புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிறுத்தை, குதிரையை துரத்திச் சென்று தாக்கிக் கொன்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங் மைதானம் முன்புறம் கன்றுக் குட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments