சைனீஸ் புருக்கோலி கிலோ ரூ. 250-க்கு விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் சைனீஸ் காய்கறியான புருக்கோலி பற்றாக்குறை காரணமாக கிலோ ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் சைனீஸ் காய்கறியான புருக்கோலி பற்றாக்குறை காரணமாக கிலோ ரூ.200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் மற்றும் சைனீஸ் காய்கறிகள் அதிக அளவு பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில் உதகை மாா்க்கெட் சந்தையில் புருக்கோலி கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
மழையால் பாதிக்கு மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும், குளிரின் தாக்கத்தாலும், சூப் உபயோகம் அதிகம் இருப்பதாலும் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.