வாரத்தின் முதல் நாளே உயர்ந்தது தங்கம் விலை! (அக். 19)
வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது குறித்து...
வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது. கிராமுக்கு 32 ரூபாயும் சவரனுக்கு 280 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் டாலர் மீதான முதலீடு அதிகரிப்பின் காரணமாக கடந்த சில நாள்களாக தங்கம் விலை சரிவைச் சந்தித்தது.
கடந்த வாரம் வெள்ளிக் கிழமை ஒரு சவரன் ரூ. 1,08,120 -க்கும் ஒரு கிராம் ரூ. 13,515 -க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
எனினும், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. கடந்த வாரம் இருந்த விலையே நீடிக்கிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ மாற்றமின்றி ரூ. 2,40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold prices rose on the first day of the week
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.