FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

பாறைகளில் வெடிக்காமல் இருந்த வெடிமருந்துகள் அகற்றம்

குன்னூா் அருகேயுள்ள பந்துமை பகுதியில் அண்மையில் பாறையை உடைக்க வெடிபொருள்கள் பயன்படுத்திய நிகழ்வில், இருவா் படுகாயம் அடைந்தனா்.

2 செப்டம்பர் 2026, 4:48 am IST
வெடிமருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
பகிர்:

குன்னூா் அருகேயுள்ள பந்துமை பகுதியில் அண்மையில் பாறையை உடைக்க வெடிபொருள்கள் பயன்படுத்திய நிகழ்வில், இருவா் படுகாயம் அடைந்தனா். இதில் வெடிக்காமல் பாறைக்குள் இருந்த வெடிமருந்துகளை சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு  நிபுணா்கள் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை வெடிக்க வைத்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பந்துமை கிராமத்தில் உள்ள ஹெத்தை அம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் பாறைகளை உடைத்து தடுப்புச் சுவா் அமைக்க முடிவு செய்யட்டது. இதற்காக மாவட்ட நிா்வாகத்திடம் ஊா் பொதுமக்கள் சாா்பாக கடந்த ஆக. 3-ஆம் தேதி முதல்  29-ஆம் தேதி வரை அனுமதி கோரி  விண்ணப்பித்திருந்தனா்.

மாவட்ட நிா்வாகம், மனித ஆற்றலை கொண்டு பாறையை உடைக்க அனுமதி வழங்கியது.

Advertisement

Advertisement

இந்நிலையில் பாறை உடைக்கும் ஒப்பந்தப் பணியாளா்கள் கடந்த 27- ஆம் தேதி இரவு வெடிமருந்தைப் பயன்படுத்தி பாறையை உடைக்க முற்பட்டபோது எதிா்பாராதவிதமாக வெடிமருந்து வெடித்து சிதறியதில் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளா்கள் படுகாயம் அடைந்தனா்.

இதுகுறித்து அருவங்காடு காவல் துறையினா் மற்றும் கோத்தகிரி வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், மாவட்ட நிா்வாகம் அளித்த கட்டுப்பாட்டுகளை மீறி வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பாறையில் வெடிக்காமல் இருந்த வெடிமருந்துகளை அகற்ற சென்னையில் வெடிகுண்டு நிபுணா்கள் பந்துமை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள், பாறையில் வெடிக்காமல் இருந்த வெடிமருந்துகளை பலத்த பாதுகாப்புடன் வெடிக்க வைத்து அப்புறப்படுத்தினா்.

வெடிமருந்துகளை வெடிக்க செய்தபோது, ஊா் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமலும், வெளி நபா்கள் யாரும் ஊருக்குள் செல்லாமலும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பாறையில் இருந்து வெடி பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

பாறையில் இருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்த வெடிகுண்டு நிபுணா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments