FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

உடுமலையில் வீட்டில் திருடுபோன 89 பவுன் மீட்பு: போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

உடுமலையில் பூட்டியிருந்த வீட்டில் திருடுபோன சுமார் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 89 பவுன் நகைகளை புதன்கிழமை மீட்ட போலீஸாருக்கு  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:18 am IST
பகிர்:

உடுமலையில் பூட்டியிருந்த வீட்டில் திருடுபோன சுமார் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 89 பவுன் நகைகளை புதன்கிழமை மீட்ட போலீஸாருக்கு  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
  உடுமலை நகரை ஒட்டியுள்ள ஸ்டேட் பாங்க் காலனி, சௌந்திரராஜ் லே அவுட்டை சேர்ந்தவர் பழனிசாமி மகன் வெற்றிவேலன். இவர் தனது குடும்பத்தாருடன் கடந்த  மே 5 ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார். அப்போது,  இவரது வீட்டின் பூட்டை உடைத்து 89 பவுன் நகைகளை  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை மூலமாக விசாரணை நடத்தி வந்தனர்.
   இந்நிலையில், உடுமலை காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளி வீதியில் போலீஸார் புதன்கிழமை ரோந்து சென்றனர். 
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபர் போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே,  இருசக்கர வாகனத்தை போலீஸார் துரத்திச் சென்று அந்த நபரைப் பிடித்தனர்.
   விசாரணையில்,  அந்த நபர் உடுமலை அருகே பொட்டிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலு (32) என்பதும், அவர் வெற்றிவேலவன் வீட்டில் நகைகளைத் திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து,  ஷாலு கூறிய இடத்தில் மறைத்து 
வைக்கப்பட்டிருந்த 89 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். 
  இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி மீட்கப்பட்ட நகைகளை நேரில் பார்வையிட்டு இந்த வழக்கில் துப்புத் துலக்கிய உடுமலை காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் ராஜகணேஷ், தலைமைக் காவலர் பஞ்சலிங்கம் உள்ளிட்டோருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். உடுமலை டிஎஸ்பி ஜெயச்சந்திரன், ஆய்வாளர் ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments